சுத்தம் செய்ய வேண்டிய பகுதிகள் :
சிங்கின் வடிகால் பகுதி, சிங்கின் பிளேட் பகுதி என மூலை முடுக்குகளிலும் நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். சிங்கில் உள்ள எண்ணெய் பசையை போக்க பேக்கிங் சோடா மற்றும் சோப்பு கலவை உதவுகிறது. பேக்கிங் சோடா சிங்கில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்க உதவுகிறது.
வடிகால் பகுதியை சுத்தம் செய்யும் போது சிறிய பிரஷ்ஷைப் பயன்படுத்தி சுத்தம் செய்யலாம். பல் துலக்கும் பிரஷ் கொண்டு வடிகால் பகுதியை நீங்கள் சுத்தம் செய்யலாம்.
மேலும் சமையல் சோடா மற்றும் வெதுவெதுப்பான நீரை வடிகால் வழியாக ஊற்றி அதிலுள்ள அழுக்குகளை வெளியேற்றலாம். இது சிங்கை நன்றாக சுத்தம் செய்ய உதவுகிறது.
சிங்கை சுத்தம் செய்யும்போது உங்கள் கைகள் பாழாகமல் இருக்க கையுறைகளை நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
இறுதியாக உலர்ந்த துணியால் உங்கள் சிங்கை நன்றாக துடைத்துக் கொள்ளுங்கள்.
cooling foods: குளிர்காலத்தில் ஜில்லுனு இருக்கும் உணவுகளை சாப்பிட்டா என்னென்ன பிரச்சினைகள் வரும்...